திரவ முத்தம்

மழை விழும்
மாலைப்பொழுது !

அந்திமந்தாரையும்
மயங்கும் வேளை

ஒரு குடைக்குள்
இரு ஜீவன் - நனையும்
பொழுது

நானோ உன்
மூச்சு வெப்பத்தில்
தீக்காய்ந்தேன் -
என் குளிர் தவிர்க்க!

நீயோ உன்
திரவம் முத்தத்தில்
தீப்பற்ற. வைக்க.
முயன்றாய்!

நடுங்கிய தேகத்துடன்
உன்னை விட்டு நீங்க
நிழலாய் பற்றியது -உன்
தேகம்!

என் இடையினில்
உன் கை வைத்து
என் இதயத்தில்
இடி இறக்கினாய்!

பற்றிய உன் கரத்திலிருந்து
பத்தடி விலகிய பின்னும்
இதய வலி நின்றபாடில்லை!
விலகியதற்கா - இன்னும்
விலகாமலிருப்பதற்கா
விளங்குவதற்குள் - முன்னேறினாய்!

என் கன்னத்தில்
பதித்தாய் - தீப்பற்றும்
திரவ. முத்தத்தை!

உன்னை விட்டு விலகுவதற்குள்
விலங்கி விட்டது நான்
உன் அடைக்கலமாகி வெகு
நேரமாகிவிட்டது என்று!

வெளியில் பெய்த மழை
உன் இதழினில் தொடர்ந்தது!
நிலமாய் நான் நிற்க
நீல வான திரவமாய் - பொழிந்தாய்
" திரவ முத்தத்தை " !

எழுதியவர் : akalnila (23-Feb-14, 10:58 pm)
சேர்த்தது : akalnila
பார்வை : 119

மேலே