புதிது புதிதாக
புதிதாக ஒரு மலர்
மலருகிறது !
புதிதாக ஒரு கதிர்
விரிகிறது !
இளந் தென்றல் ஒன்று
மெல்ல மேனி வருடி
மாலைக்கும் வரவேற்பு
நல்கி செல்கிறது !
பறவைகள் சிறகுகளில்
எழுதிய தென்றல் கவிதையை
வானத்தின் நீலத்தில்
பாடிச் செல்கிறது !
இயற்கையின் பக்கங்கள்
இனிதாகத் திரும்பும் இந்த
இளங் காலைப் பொழுதினில்
இதயம் எண்ணங்களை
புதிது புதிதாக
எழுதத் துவங்குகிறது !
-----கவின் சாரலன்