இலக்கணம் பயில்வோம்

தமிழ்தாய் வருவாள் இலட்சனமாய்!!
வகுத்தே தரும் இலக்கணமாய்!

நிறை குறை இல்லாது செம்மொழி!
என் மனம் உறைக்கும் பொன்மொழி!!
அறிந்ததை இங்கு வியம்புகிறேன்!
நிறை குறை இருப்பின் விளக்குங்கள்!!

நேர் நேர் தேமா!
நிறை நேர் புளிமா!
நிறை நிறை கருவிளம்!
நேர் நிறை கூவிளம்!

அற்புதம் பாருங்கள்!!
இத்துடன் நேர் சேர்ந்தால்
காய் ஆகும்!
நிறை சேர்ந்தால்
கனி ஆகும்!

பற்பல தகவல் தந்தாலும்
பிரிப்பது அறியேன்!
எல்லாம் வீண்!!
ஆதலினால் அறிந்ததை தருகின்றேன்!
அறியாதது கோடி கோடி...!!

ஒரு குறில்!
ஒரு குறில் ஒற்று!
ஒரு நெடில்!
ஒருநெடில் ஒற்று!
நேர் அசை!!

இரு குறில்!
இரு குறில் ஒற்று!
இரு நெடில்!
இருநெடில் ஒற்று!
நிறை அசையாகும்!!

இரு அசைகள் சேர்ந்தே
செந்தமிழின் இசையாகும்!!
தாயின் தாலாட்டு
நாம் உறங்கிட தானே!!
நம் இலக்கணத் தாலாட்டு
செந்தமிழ் எழும்பிட தானே!!

எழுதியவர் : கனகரத்தினம் (24-Feb-14, 2:18 pm)
பார்வை : 211

மேலே