அவிழும் நிலையில் அரும்பாய் காதல்

நிலவின் மடியில் நிழலாய் பிறந்தாள்
இரவின் குடிலில் வெந்நிழலாய் வளர்ந்தாள்
நினைவின் வழியில் நிலவாய் திரிந்தாள்
நிழலால் நினைவை நிறைவாய் மறைத்தாள்

இதழின் ஒரு ஓரம் வடியும் நறுந் தேனும்
இடையின் கொடிமேலே உடையா இரு மொட்டும் - அடி
காவல் கொண்ட காதல் நெஞ்சின்
கதவு உடைந்திட முட்டும்

பறிக்காத பூ என்னை வேரோடு கொய்தாய் அது
இனிக்காத தால் தேன் விரலோடு கொண்டாய்
வழிதோறும் பார்க்கும் வெளியாவிலும்
பழிப்பார்வை பார்த்தே ஒளிதேய்ந்திடும்
இனி எல்லாமே துளியும் மெய்யாதே
வரி பொய்யாமல் கவியும் எய்யாதே
அட பதியம் இட்ட பொய்கள் மேலே
பந்தல் இடுத்திடும் காதல்

அதி மின்னிறக்க (அ)னற்கூறு நெருங்கிடத் தூர
இடி நரம்போடு சேந்து இடர்நெருக்கடி சேர
விதிக்காத சமிக்கைகள் அரங்கேறுதே
பதிக்காத பாகத்தில் பகிர்ந்தோடுதே
செயல் எல்லாமே செயல் அற்றாமல்
சிறு பூங்காத்தால் தழல் பற்றாமல்
உயிர் உறைவிட்ட பாலைப் போல
சிறுக சிறுக இறுக

இதழின் ஒரு ஓரம் வடியும் நறுந் தேனும்
இடையின் கொடிமேலே உடையா இரு மொட்டும் - அடி
காவல் கொண்ட காதல் நெஞ்சின்
கதவு உடைந்திட முட்டும்


அதி மின்னிறக்க அனற்கூறு - High voltaic discharge

எழுதியவர் : ராஜராஜன் (24-Feb-14, 11:45 am)
பார்வை : 153

மேலே