சிரிக்க மட்டும் யாருடைய மனதையும் நோகடிப்பதற்காக அல்ல-
சிரிக்க மட்டும் யாருடைய மனதையும் நோகடிப்பதற்காக அல்ல):-
மனைவி: இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்: பருப்பும் சாதமும்
மனைவி: நேத்துதான் அதை சாப்பிட்டோம்
கணவன்: அப்படினா கத்திரிக்காய் வறுவல்
மனைவி:: உங்க பையனுக்கு பிடிக்காது
கணவன்:முட்டை பொறியல்?
மனைவி: இன்னைக்கு வெள்ளிக்கிழமை
கணவன்: பூரி?
மனைவி: நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்
கணவன்: நான் வேணா ஹோட்டல்ல இருந்து பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி: ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்பு கெட்டுபோகும்
கணவன்: மோர் குழம்பு?
மனைவி: வீட்ல மோர் இல்ல
கணவன்: இட்லி சாம்பார்?
மனைவி: நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும்
கணவன்: அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி: சாப்பிட மாதிரியே இருக்காது. பசி எடுக்கும்.
கணவன்: வேற என்னதான் சமைக்கப் போற?
மனைவி: நீங்க என்ன சொல்றீங்களோ அது.
கணவன்: ஆணியே புடுங்க வேணாம் போடி...