vayarless
அமெரிக்கர்கள் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள்
கிடைத்தன. உடனே அவர்கள்
அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள்
மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்.”
இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள்
கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியுள்ளார்கள்”
இந்நியர்களும் தோண்டினார்கள். 1000
அடி தாண்டியும் ஒன்றும்
கிடைக்கவில்லை.
உடனே அறிவித்தார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்” என்று..