விடுமுறை ~ விதிமுறை

விடுமுறை ~ விதிமுறை
~~~~~~~~~~~~~~~~~~~~~~
குறுக்குக் கட்டி நீ குளிக்கையிலே
குறுக்கு மறுக்காய் அலையுதடி மனசு!
குறும்புக்காரன் மனசுக்குள்ளே
குறுகுறுக்குதடி வயசு!

தலைக்கு சீயாக்காய் தேய்ச்சு
சிகைக்கு சாம்பிராணி காட்டி
நீ குளிச்சு முடிந்தபின்னும்,
எனக்கு முடியவில்லை!
என் இதயம் படியவில்லை!!

புது உடையுடுத்தி வந்த பின்னும்
என் படையெடுப்பு அடங்கவில்லை!
மடையுடைத்த எண்ணத்தில்...
தடையுடைக்கும் திட்டத்தில்
என் கவனமெல்லாம் உன்னிடத்தில்
உன் கவளம் போன்ற கன்னத்தில்!

சமயலறைக் கட்டில் நீ சமைக்கையிலே,
சமைந்தவள் உனைப் பார்க்கையிலே...
என் சிந்தனையும் சமையுதடி!
எண்ணெய் ஊற்றாதே...!
என் எண்ணமெல்லாம் வழுக்குதடி!!

சாமி சிலை முன்னாடி
சாந்தமாய்த்தான் தெரிகிறாய்!
திரைச்சீலை பின்னாடி
காந்தமாய் ஏன் இழுக்கிறாய்!?

ஒரு நாளில் எத்தனை தடவையெனை
தவணைமுறையில் சாகடிப்பாய்?
விடுமுறை நாளில்கூட
விட்டுக்கொடுக்க மாட்டாயா?!
பிடிவாதக்காரி நீ....
பிடிகொடுக்க மாட்டாயா?!

கொஞ்சம் விட்டுக்கொடுடி கொஞ்ச(ம்)
இப்பவே வேண்டும் எனக்கு மஞ்சம்
விடுமுறை நாளென்றால்
துயிலறைக்கில்லை அது!
படிமுறை விதிமுறை எல்லாம்
இல்லறக் காதலுக்கு இல்லவேயில்லை அது!

எல்லை மீறி வாறன்!
உன்னையே தாயேன்...!!
விதி மீறத்தான் போறன்!
கதி நீயென்றே ஆவேன்...!!

வேண்டாமென்று சொன்னாலும்...
சும்மா நான் விடமாட்டேன்!
'சீ போடா' என்று செல்லமாய்...
நீ திட்டினாலும் விடமாட்டேன்!!

கட்டியவளை கட்டிலிலே
கட்டிக்கொண்ட பின் தொட்டிலிலே....
எட்டிப்பிடிக்கும் பிஞ்சு விரல்கள்
சுட்டிக்காட்டுது நெஞ்சி (இ)ன் காதலதை!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எழுதியவர் : ஒருவன் ~ கவிதை (24-Feb-14, 6:12 pm)
பார்வை : 214

மேலே