என்னவளே

புதுப்புது உறவுகள் தரும்
புதியதோர் உறவா நீ!

கலர்க் கலர்க் கனவுகள் தரும்
கனல் வண்ணக் கனவா நீ!

ஒளிர்கின்ற நினைவுகள் தரும்
ஒளிதரும் நிலவா நீ!

ஓராயிரம் சொல்லித் தரும்
ஓவியத்தின் எழிலா நீ!

இரவெல்லாம் இன்பம் தரும்
ஈடில்லாக் கவியா நீ!

பகலெல்லாம் பருகுகின்ற
பாசமுள்ள சுவையா நீ!

காதலிக்கச் சொல்லுகிற கலையா நீ -
கவிதைகளை அள்ளித்தரும் கலைவாணி!

நான்
சிலிர்க்கின்ற மழையா நீ!
சில்லென்ற காற்றா நீ!
சிந்தைக்குள் ஊடுருவிச்
சொக்க வைக்கும் செம்மேனி!

எனைச்
செதுக்குகிற உளியா நீ!
சேர்த்தணைக்கும் உணர்வா நீ!
செவ்விதழில் தேன் குழைத்துச்
சுவைக்க வரும் செந்தேனி -

செந்தேன் நீ!

எழுதியவர் : மனோ & மனோ (25-Feb-14, 4:38 pm)
Tanglish : ennavale
பார்வை : 278

மேலே