நூற்றுக்குப் பத்து போதாது - மலர்1991

பத்து நல்லதைச் சொல்ல
தொன்னூறு கெட்டதைக் காட்டுவது
காணொலி பொழுது போக்கிகளுக்கு
கைவந்த கலையாகும்.

நல்லது பத்தும் நம்மைச் சேராமல்
பஞ்சாய்ப் பறந்துவிடும்
நம் மனதில் பதியாமல்.

நல்லதை உள்வாங்கும் திறன்
நம்மில் பலபேர்க்கு இல்லை.

தொன்னூறு மட்டும் தீரா நோயாய்
தொற்றிக் கொள்ளும்
கண்டாலோ காதில் கேட்டாலோ.

ஊடகத்தார் தவறல்ல
அவர்களுக்கு ஆதரவை
அள்ளிக் கொடுப்பது யார்?
நல்லதை சுவைக்காமல்
நலங்கெடுக்கும் செயல்களுக்கே
முன்னுரிமை கொடுத்து விட்டு
வர்த்தகம் செய்பவரை
குறை சொல்லிப் பயனில்லை.

மொழிப் பற்றை ஒதுக்கிவிட்டு
பண்பாட்டைப் புறந்தள்ளி
ஆபாசம் வன்முறை
பழிவாங்கல் கதையாக
ஆதரவை அளிப்பவரே
கெடுவதை உணராமல்
கெட்டொழிய ஆசை கொள்ளும்
சுவைஞர் பெருமக்களே.

சுவைஞர்களே
சமுதாய நலன் கருதி
நல்லதையே நாடுங்கள்.
காணொலி ஊடகங்கள்
மாறாமல் நிலைத்திருக்க
ஆதரவைத் தாராதீர்.
அதுபோதும் அவர்களிடம்
நல்மாற்றம் நீர் காண.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (25-Feb-14, 6:57 pm)
பார்வை : 146

மேலே