இழப்பதற்கு உயிரின்றி வேறில்லை
அதிகார வர்க்கமிவன் என்
உழைப்பை திருடிக்கொண்டு
உன்னுயிர் வளர்க்கிறாய்
உனக்கும் எனக்கும்
உயிரென்பது ஒன்றே
பிரிந்தால் மீளப்பெறாது
இதற்கிடையில் ஏனுனக்கு
இந்த பிரிவினைவாதம்
உதிரம் குடிக்கும் அட்டையாய்
நீயோ என் உயிரையல்லவா
வேண்டும் சமத்துவமென்றே
மார்தட்டிய வேந்தரெல்லாம்
இன்றளவும் கேளிக்கையாவே
இந்த ஏழையின் கூக்குரல்
இன்னும் எத்துனை காலம்
அடிமைபோல் அடங்கியே
பணத்தை மட்டுமே நீ
பார்க்கிறாயே பாவம்
என் மனதையெப்போது
குதிரைக்கு சேனைபோல
அதிகார போதையுன்
பார்வைதனை மறைத்ததோ
மனிதன்தானடா நானும்
நீ மட்டுமேன் மிருகமாவே
சுவாசம் நின்றால் பிணம்
உனக்கு நேசமென்ன பணமா ,,
ஆடையின்றி அம்மணமானேன்
நீயோ ஆடையிலும் நிர்வாணம்
இதிங்கே வாடிக்கையாகிவிட்ட
வேடிக்கைகளாக தொடர்கிறது
பூனைக்கு இங்கு மணிகட்டுவது
யாரென்றே தொடர் சர்ச்சைகள்
இன்னும் முடிவுக்குவராமலே
முட்டி மோதிக்கொண்டிருக்கிறது
ஒற்றுமையில்லாத காரணத்தால்
விடியல்களில் பொதிகள் சுமந்து
இரவினில் வீராய்ப்பு பேசும்வரை
என்றுமே உன்பொழுது விடியாமலே
இருண்டே போய்விடும் உன் வாழ்வு
விலைகள் உயிரென்றல் இன்னுமா
விழித்துக்கொ(ல்)ள் இனியேனொம் ,,
விடியலுக்கான வித்தோடு வீரமாய்,,
அப்துல்ஹமீது(எ)கூருதீன்....