ஏனென்று விளங்கவில்லை

ஏனென்று விளங்கவில்லை
ஆட்சிக்கு வந்தவுடன்
முந்தைய ஆட்சி திட்டத்தை
நீக்குவது அல்லது பெயர் மாற்றுவது

ஏனென்று விளங்கவில்லை
அடுத்த நபர் மனதை புண்படுத்தும் போது
சிரிக்கும் மனது
தம்மை யாராவது புண்படுத்தும் போது
கலங்குவது

ஏனென்று விளங்கவில்லை
ஆண் செய்யும் தவறினை
பெண் செய்யும் பொழுது
பெண்ணே தவறென்பது

ஏனென்று விளங்கவில்லை
பேருந்தில் ஆண்கள்
இடம் மாறி அமர்ந்து பெண்ணிற்கு
இடம் தந்தாலும் பெண்கள்
இடம் மாறாமல் அடம் பிடிப்பது

ஏனென்று விளங்கவில்லை
ஒப்பணை இல்லாமலே அழகாய் தெரியும் பெண்கள்
ஒப்பணையில் அழுக்காய் தெரிவது

ஏனென்று விளங்கவில்லை
காதலர்கள் அரைத்த
மாவையே அரைப்பது

ஏனென்று விளங்கவில்லை
எத்தனை நாட்கள் விடுமுறை இருந்தாலும்
கடைசி நாள் இரவே வீட்டுப் பாடம் எழுதுவது

ஏனென்று விளங்கவில்லை
மின் வெட்டு காலத்திலும் மின்சாரத்தை
அதிகமாக் செலவலிப்பது

ஏனென்று விளங்கவில்லை
எல்லா வரவேற்பரையிலும்
பெண்களே வரவேற்ப்பாளராக இருப்பது

ஏனென்று விளங்கவில்லை
உற்சாகம் என்றால்
உ.பா கேட்பது

ஏனென்று விளங்கவில்லை
சாதரணமாய் இருக்கும் பொழுது
சாயா வாங்கி தர கணக்கு பார்ப்போரும்
சரக்கு உள்ளே சென்றவுடன்
வள்ளல் போல வாரி வழங்குவது

ஏனென்று விளங்கவில்லை
எல்லா இடங்களிலும் பெண்களை
காட்சிப் பொருளாகவும்,
கவர்ச்சி பொருளாகவும் காண்பிப்பது

ஏனென்று விளங்கவில்லை
நான் பார்க்கும் பெண்கள் யாவரும்
என் நண்பர்களை பார்ப்பது

ஏனென்று விளங்கவில்லை
என்னுடன் படித்த பெண்களுக்கு
விரைவாகவே திருமணம் நடப்பது

ஏனென்று விளங்கவில்லை
மகளிர் தினம் கொண்டாடும் உலகம்
ஆடவர் தினம் கொண்டாட மறந்தது

ஏனென்று விளங்கவில்லை
தமிழில் பேசும் பொழுது
ஆங்கிலம் கலப்பதை கருத்தில் கொள்ளாது
ஆங்கிலத்தில் பேசும் பொழுது
தமிழ் கலவாமல் இருக்க வேண்டுமென்று எண்ணுவது

ஏனென்று விளங்கவில்லை
பிறர் கவிதை எழுதும் பொழுது
வந்து விழும் வார்த்தைகள்
நான் கவிதை எழுதும் பொழுது
எண்ண வாசல் கடக்க மறுப்பது

எழுதியவர் : சதீஸ்குமார் பா ஜோதி (26-Feb-14, 10:15 am)
பார்வை : 133

மேலே