மறந்து விட்டேன் உன்னை

மறந்து விட்டேன் உன்னை !
மறந்து விட்டேன் உன்னை,
என்று நீ என்னை துறந்தாயோ
அன்றே மறந்து விட்டேன் உன்னை !!
இருந்தும்
உன் நினைவில்லாமல் நகர்வதில்லை
" ஒவ்வொரு நாளும் ",
காலம்
" கரை கடந்த புயலாக " மாற்றிவிட்டது
உன்னை
உன்னால் ஏற்பட்ட சேதங்கள்
ஏதும் மாறவில்லை - மறையவில்லை
என்னில்
நீ
என் பெயரை
" அழியும் மை கொண்டு எழுதினாய் "
உன் இதயத்தில்
நானோ
உன் பெயரை
" உளி கொண்டு செதுக்கி விட்டேன் "
என் இதயத்தில்
இதயத்தில் செதுக்கிய உன் பெயர்
அதன் மறுபுறம் துளைத்து
இன்னப் பிற பாகங்களிலும்
நீண்டுள்ளதை பார்த்தால் தெரியும்
என் காதலின் ஆழம்
இருந்தும்
எனக்கு நானே சொல்லும் ஆறுதல்
" மறந்து விட்டேன் உன்னை "