தேடல்
பண பேய்களின் மத்தியில் பாசத்தை தேடுகிறேன்,
அரக்கர்கள் மத்தியில் அன்பை தேடுகிறேன்,
ஜாதிகளின் மத்தியில் சமத்துவத்தை தேடுகிறேன்,
மதங்களின் மத்தியில் மனிதனை தேடுகிறேன்,
உறவுகளின் மத்தியில் உண்மையை தேடுகிறேன்,
தேடுகிறேன்! தேடுகிறேன்!
என் தேடலின் விடை கிடைக்கும் வரை தேடுகிறேன்.