ஏன் பறந்து சென்றாய்

பாவாடை காற்றிலாட
பாவை நீ காந்திருக்க
பாடகன் நான் பக்கம் வர
பைங்கிளி ஏன் பறந்து சென்றாய்?

மௌனப் புன்னகையால்
மனத்தைக் கவர்ந்து விட்டு
மாமன் நான் வந்தவுடன்
மங்கை ஏன் மறைந்து விட்டாய்?

நிழலாய் நீயும் என்
நெஞ்சுக்குள் இருந்து கொண்டு
நித்தமும் ஏன் என்னை
நித்திரையில் வாட்டுகிறாய்?

தனிமையில் நீ தவிக்கும் போது
துணை தர பக்கம் வந்தேன்-
தனியாய் என்னை விட்டு விட்டு
தூரமாய் ஏன் சென்றுவிட்டாய்?

எழுதியவர் : மனோ & மனோ (26-Feb-14, 5:58 pm)
Tanglish : en paranthu senraai
பார்வை : 88

மேலே