கனவுகளின் முடிவில்

ஓர் மழை நாள் இரவில்.........!

கிறுக்கி கிறுக்கி
கிழித்தெறிந்த
காகிதம் போல........
என் மனம்.......

உரலுக்கும்
உலக்கைக்கும்
இடையே இதயம்
வைத்து.......
வானத்துக்கும்
பூமிக்குமாய்
குதிக்கிறேன் ஏனோ........!


அவள் கொலுசின் ஜதி
கேட்டு அனிச்சையாய்
ஆடித்துடிக்கிறது என்
நாடி நரம்பெல்லாம்........!

என் இதயத்தின்
ஐந்தாம் அறையில்
பார்த்த அதே
முகம்.........!

என் பிரசவ அறை
அல்லாது......
பிற சவ அறைகளுக்கும்
உயிர் ஊட்டி
கொண்டிருந்தது............!

ஆக்சிஜென் ஹீலியமாக மாறி
நட்சத்திரங்கள்
ஒளிர்வது போல.......
ஏதேதோ வேதி மாற்றம்
நிகழ்த்தி கொண்டிருந்தாள்......!

கொஞ்சம் புன்னகை
நிறைய கோபம்
கசப்போடு கலந்த
இனிப்பான வெட்கம்.................!

நிலை குலைந்து
மதி மயங்கி
கந்தலாய்.....
கிடந்த வேளையிலே......

அந்த நீண்ட
விழி விரிய முறைக்கவும்
தொடங்கினாள்...............

கனவின்
கனவிலாவது
உறங்கவிடு........
என்று
கெஞ்சும் போது
கனவின் முடிவிலும் அவளே..........!

எழுதியவர் : வித்யா (26-Feb-14, 4:53 pm)
Tanglish : kanavugalin mudivil
பார்வை : 416

மேலே