என்னுயிர் காதலியே
இனியொருமுறை உன்னை
என் தோட்டத்தினுள்
அனுமதிக்கமாட்டேன்
அங்குள்ள
வண்ணத்துப்பூட்சிகளெல்லாம்
உன் பின்னே வந்துவிட,
மலர்களெல்லாம் என் மீது
கோபிக்கின்றன!!
----------------------------------
தேனாயும் கொட்டுகிறாய்
தேனீயாயும் கொட்டுகிறாய்
உன்னைப்புரிந்துகொள்ள
இன்னொரு இதயம் வேண்டும்
எனக்கு!!
------------------------------
முத்தமிடும் வேளையில்
குத்திவிட்டது மூக்குத்தி என்றேன்,
சத்தமின்றி கழற்றி விட்டாய்
மூக்குத்தியோடு வெட்கத்தையும்!!
--------------------------------------
விடிகாலை வாசலில் - உன்
விரல் பட்ட துடைப்பம் கூட
தூரிகையாய் மாறியதே!!

