ஓம் நமசிவாய

ஒளிபிழம்பு ஜோதி ஸ்தலம் திருவண்ணாமலை

ஒரு அருவமாய் ஆகாய ஸ்தலம் சிதம்பரம்

ஓங்காரமாய் காற்று ஸ்தலம் காளஹஸ்தி

ஓயாமல் உருளும் பூமி ஸ்தலம் காஞ்சிபுரம்

ஓடி உயர்காக்கும் நீர் ஸ்தலம் திருவானைகாவல்

ஓதற்கறிய பஞ்சபூத ஸ்தலங்கள் தரிசனம் .


ஓவியங்களிடையே குற்றாலம் சித்திர சபை நடனம்

ஒருகால் மாறி மதுரை வெள்ளி சபை நடனம்

ஒப்பில்லாத சிதம்பரம் பொற் சபை நடனம்

ஒருபோட்டி திருவாலங்காடு இரத்ன சபை நடனம்

ஒலிக்கும் இசையில் நெல்லை தாமிர சபை நடனம்

ஓசைக்கும் உயிர் அசைவிற்கும் பஞ்ச சபை நடனம் .

எழுதியவர் : karmugil (26-Feb-14, 7:38 pm)
சேர்த்தது : karmugil
பார்வை : 85

மேலே