எதையிங்கு விட்டுச் செல்ல
நீ
நான்...
உடலின் பறவைகள் நாம்.
வாழ்தலின் நம்பிக்கை
மயிற்பீலியாய் விரிய...
வனத்தின் குரலாகிறது
ஒளிந்திருக்கும் நம் இச்சைகள்.
மகிழ்வின் மசி நிரம்பிய சிறகுகள்
கடவுளுக்கு அருகில் விசிறிச் செல்ல
மழை வீசும் வானத்தில்
கமல மடலாய் விரியும் நம் கனவுகள்.
இயலாமையின் உபதேசங்கள் விலகி...
நோய் நீங்கிய சூரியனில்
நம் வழித்தடத்தில் நடக்கும் கடவுளிடம்...
வாழ்வின் சிறகுகளை அசைத்து வினவுகிறோம்...
"எதையிங்கு விட்டுச் செல்ல?"...என.