பட்டிக்காடா பட்டணமா

ஆவாரம் காட்டுக்குள்ள
வந்தமர்ந்த பெண்மயிலே!!
உன் மஞ்சள் அழக கண்டு
ஆவாரம் பூ கருகிருச்சே!!

போகாதே போகாதே புறவாசல்
போகதென்று நானும் சொல்ல சொல்ல!!
புறவாசல் போனதாலே மல்லிகைப்பூ
வாசமெல்லாம் உன்மேனியில வீசுதடி !!

குளிக்காதே குளிக்காதனு கூப்பாடு
நானும் போட்டும் ! கேக்காம நீயும் தான்
குளதுலத்தான் குளிச்சீயடி...!
குளத்து தண்ணியெல்லாம் பன்னீரா இனிக்குதடி!!

கண்ணுமணி பொன்னுமணி
காடுவிட்டு வாயேண்டி!!
குப்பைமேடு கூவம் எல்லாம்
நறுமணமா வீசட்டுமடி!!

கட்டு கட்டா பணமும் தாரேன்!!
அடுக்கடுக்கா வீடும் தாரேன்!!
காரு வண்டி வேணுமுனா நான் தாரேன்!!
உன் காற்று பட்டா போதுமடி...!!

காசு பணம் வேண்டி நானும்
பட்டிக்காட்ட விட்டுபுட்டு...!
பட்டணம் தான் வந்தேனடி ...!
பட்டணத்த பார்கையில....!
பட்டிகாடே நீயே மேலடி...!

மரத்தடியில் படுத்தாலும்
பயமே இல்லையடி !
மாளிகையில் இருந்துகிட்டு
போட்டுகிறேன் தாள்பளாதானடி ... !

கூப்பிட்ட குரலுக்கு-பட்டிகாட்டில்
ஊரெல்லாம் ஓடிவரும்!!
உயிரேதான் போனாலும்-பட்டணத்தில்
ஊருசனம் வாராதடி !!

எழுதியவர் : கனகரத்தினம் (27-Feb-14, 11:00 pm)
பார்வை : 193

மேலே