தப்பகுளி காட்டில் ஒரு பார்வை

தாமதமாக மஹேந்திரா சைலோ கிளம்பியது..
அஞ்செட்டி வழி தப்பகுளி நோக்கி செல்ல
தேன்கனிகோட்டையில் காலை உணவு
அஞ்செட்டி வர, அடுத்து உரிகம் வரை தார் சாலை
அடுத்து மேடும், பள்ளமுமாய் மண் சாலை
செல்லும் வழியில் யானையின் சாணம்
வண்டியை நிறுத்தி இருபுறமும் எங்கள் கண்கள்
யானயை தேட…. தொடர்ந்து சென்றோம்…
தப்பகுளியை அடைந்தோம்.
நமணம் சென்டர் நிறுவனர் காத்திருந்தார்.
அங்கு மேட்டில் ஒரு சிவன் கோவில்
அடுத்து ஒரு பழைய கோவில்
அது கோவில் அல்ல..
400 ஆண்டுகளுக்கு முன் சோழர் கட்டியது
அதில் பல பதுங்கும் அறைகள்..
நடு பகுதி, இடைப் பகுதி, சுற்று பகுதி, என…
இடையில் உள்ள நடை பகுதியில் சூரிய ஒளி…
அறைகளில் நல்ல காற்றோட்டம்…
அந்த சிரிய கட்டித்தில் 400 பேர் தங்கலாம்.
பதுங்கி இருப்பது யாருக்கும் தெரியாது
போர் காலத்திற்க்கு அது
கேன் சொசைடி நண்பர்கள் வந்து சேர
பயிற்சிக்கு வந்த மாணவ, மாணவிகளுடன் ஒரு அறிமுகம்.
அடுத்து மதிய உணவு
மாணவ, மாணவிகளுடன் ஒரு போட்டி..
நாங்கள் காவிரியில் குளிக்க
மாணவ, மாணவிகள் குப்பைகளை சேகரிக்க.
தப்பகுளியை சுத்தமாக்க மாணவர்களின் ஒரு முயற்சி
அங்கும் பாலிதீன் கவர் கழிவுகள்
இன்னும் யானையை பார்க்கவில்லை
திரும்பி வரும் வழியில் அய்யுர் வனப் பகுதிக்கு செல்ல (இரவு 7 மணி)
அங்கும் யானை இல்லை.
ஆனால் ஊருக்குள் யானைகள் அட்டகாசம். (ஓசூர் பகுதி)
பாவம் மனிதர்கள்… பாவம் யானைகள் ...

எழுதியவர் : P Murugesa Pandian (27-Feb-14, 9:54 pm)
பார்வை : 119

மேலே