உழவு நாடன் 2
நெல்லுச்சோறு
வடிச்சிகிட்டு
நெலவத் தேடிப்போகயிலே
நீ இருக்க...!
நெலவிருக்கு....!!
நீட்டி மடக்கி இருந்து எழும்ப
மணலக் காணோம்
ஆத்துக்குள்ள....!!!
***************************************************
கொளம்பு உரிச்சித்
தலையக்கோதி .. நீ
நடைபழக்கி அதட்டயில...
ரெட்டைத்தாயிச் செருக்கோட
துள்ளியோடுது.......
புதுசாப் பொறந்த
ஆட்டுக்குட்டி....!!!
*****************************************************
அந்த வருச அறுவடைக்கி
அறுத்துப்போட மொத ஆளா
மாம்பழச் சேலையுடுத்தி
மங்களமா நீ எறங்க...!!
மகராசி நல்லாயிருன்னு
உதுந்து வாழ்த்துது
பழுத்த நெல்லு...!!!
******************************************************
மரிக்கொழுந்தும்
மல்லிகையுமா... செவ்வந்தி
சிறுதாமரைன்னு...
வாடாமல்லிப் பூக்களோட
வக்கனையா நீ சுத்த...
என்னபாவம் நா செஞ்சேன்னு
வெடிச்சி விழுகும்
தென்னம்பூவும்.....!!!
********************************************************