உரலும் ஒலியும்

ஒரு வாலிபன் தன் சோகத்தில் இயற்க்கை சோலை வழியே தனித்து சில வரிகள் பாடுகிறான்.ஆறுதல் மொழி கேட்கிறது.அதை புரிந்து அவனுடைய கேள்விகளை ஒவ்வொன்றாக தொடுக்க,
அவன் கேள்விக்கு பதில் கிடைக்கிறது.வழியில் பதில் கூரிய பெண்ணின் நிழல் தெரிகிறது.மறைந்திருந்ததற்க்கு விடையளித்து ஓடி மறைந்து விடுகிறாள்.
ஓரு சின்ன கருத்து பரிமாற்றம்.







ஆண்:

வாழ்க்கை எனும்வேதனையில்
வாழ்ந்துப்பார்க்கும் சோதனையில்,

வயது ஒரு சொற்ப்பம்-அதில்
வலிமையது அற்பம்,

காதிலே ரீங்காரம் இனிக்கும்
மனதிலே ஓங்காரம் ஒலிக்கும்,

கலைகளிலே சிந்தனை லயிக்கும்-இங்கே
எத்தனை சுவடுகள் நிலைக்கும்?

பெண்:
அலையில் படகுஆடித்தான் போகும்
வினா விடையை தேடிதான் சேரும்

பூத்துக் குலுங்கி உதிர்வது பருவம்ஆக
காய்அது கனிந்து தான் தீரும்

மெல்லிய தென்றலும் மிரட்டும் புயலும்
வீசும் காற்றின் வேடிக்கை தானே

கற்ச்சிலை தான் காலூண்றும்
மாக்கோலம் கரைந்திடுமே.

ஆண்:
திக்கு எட்டிருக்க செல்வது எங்கே?
புத்தி கெட்டிருக்க புலம்புவது என்ன?
மனம் பட்டிருக்க சொல்வது என்ன?

பெண்:
ஏர் செல்லும் பாதையில் நீர் செல்லும்
நிழல் பட்டிருக்கும் என்றும் படிந்திராது
மடைதிறக்க வெள்ளம்பாயும் மாசு
கரைந்தோடிடுமே.

ஆண்:
அறிவுக்கும் அரணுக்கும் அன்பிடத்தில்
பயனென்ன?

பெண்:
அருகில் துணையிருக்க அணைப்பது கரம்தாமே.

ஆண்:
உறவுக்கும் உரிமைக்கும் உள்ளத்தில்
இடமென்ன?

பெண்:
ஆசையில்வழியும் கண்ணீரானும் கைவிரல்கள்
துடைத்தெரியுமே.

ஆண்:
தாய்க்கும் தந்தைக்கும் நற்செய்தி என்பதென்ன?

பெண்:
ஊர்சொல்லும் புகழுரையில் தம்மக்கள்
பெயருன்டென்பதுவே.

ஆண்:
தனிமையிலும் தவிப்பினிலும் ஆண்மையின்
தவமென்ன?

பெண்:
நினைப்பது படியே நடக்கட்டும் என்பதுவே.

ஆண்:
குரல்மொழியில் பெண்ணினம் நிழலுருவில்
வீற்றிருப்பதென்ன?

பெண்:
மீசைமீது சடைகொண்ட அச்சமும் சலங்கையின்
நானமும் மேனியை மறைத்திட்டது.

ஆண்:
உண்மை பொருள் கூறிவிட்டாள்
என்னை என்னக்கே உணர்த்திவிட்டாள்
மையலில் மனதை ஆழ்த்திவிட்டாள்
செவிஇனிக்கும் புன்னகை உதிர்த்துவிட்டாள்
வெட்க்கத்தில் வதனத்தை மூடிவிட்டாள்
கின்கினி சலங்கைஒலி கேட்கவிட்டாள்
விழிவழியில்மறைந்து நினைவில்
நிறைந்துவிட்டாள்.

எழுதியவர் : கருமி (my brother sujithkumar) my brother (28-Feb-14, 6:21 pm)
பார்வை : 118

மேலே