சுனாமி
பல்லாயிரம் உயிர்களை
பழிதீர்த்து - நீ
பஞ்சான உள்ளங்களை
பதற வைத்தாயே!
அப்பாவி உயிர்களிடம் - உன்
அரக்கத் தன்மையை காட்டி,
நொடியிலே அழித்தாயே,
சுனாமியே!................
உன் ஆழி அலைகள்
உயிர்களை குடித்ததே,
உலகையே சுடுகாடாய்
உருவாக்கி வைத்தாயே!
கல்லான உன் நெஞ்சத்தால் - இன்று
கண்ணீரில் மிதப்போருக்கு,
கனிவாக இருக்க வேண்டியோர்
கல்லாகி விட்டார்கள்!
வீரன் என்று காட்டிடத் தான் - நீ
வீண் வேலை செய்தாயோ - உன்
வீரத்தை போற்றிடவா - மக்கள்
வீதியிலே விடப்பட்டனர்!!!