அந்த நாள் ரசனைகள்
ஒரு கோப்பை தேநீர்
தபூ சங்கர் கவிதைகள்
வீட்டிற்குள் விசிறி அடிக்கும் சாரல் மழை....
இளையராஜாவின்
உயிர் உருக்கும் இசை
அதில் சித்ராவின் குரல்
சமையல் அறையில் அம்மா உருட்டும்
பாத்திரத்தின் சங்கீதம்
நாசியை வருடும் சமையல் வாசம்
பூஜை அறையின் பக்தி வாசம்
அப்பா விடும் குறட்டை ஒலி
தங்கை நடக்கும் கொலுசின் ஒலி
இப்படியான அன்றைய ரசனைகள்
இன்றும் பசுமையாய்
உதிராமல் உயிர் பெற்ற
உன்னதம்
உவகை கொள்ள வைக்கிறது...
கவிதை எழுத சொல்கிறது

