நீயின்றி ஒரு வாழ்க்கை பயணம்
நீயின்றி ஒரு வாழ்க்கை பயணம்
அமைதியாய் ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கை..
என் வாழ்வில் நானும்
என்னுடன் என் நிழலுமென்று
பார்ப்பதை எல்லாம் ரசிப்பேன்
ரசிப்பதையெல்லாம் என் மனதில்
பதிந்து வைத்துக்கொள்வேன்
என் கவிக்கு உதவுமென்று..
அன்றும் அப்படி தான் உன்னை பார்த்து, ரசித்து
வியந்ததில் முதலில் என் கவிதையெல்லாம்
உனதாகிப் போனது.
பின் என்னையும் உனதாக்கி கொண்டாய்
அது வேறு கதை.
என் காதலுக்கு முதல் வடிவம் தந்தது
இக்கவிதை தான்
அவைகளில் தான் நீ வாழ்கிறாய்
காதலென்றால் எப்படி இருக்குமென்று கேட்டால்
ஒரு வரியில் சொல்வேன்.
என் கவிதை உருவில் நீயென்று !!
நீ யாரென்று தெரியாது..
நீ எப்படியென்று அறியேன்..
நீ எனக்கானவள் என்று மட்டும் நினைப்பேன்
உனக்காக மட்டும் வாழ்கிறேன்..
நீயின்றி அமையாது என் உலகு
உன் துணையின்றி கிடையாது
என் வாழ்க்கை
யாருக்கும் புரியாது என் அறியா காதல்
அது ஒரு குழந்தை
உன்னை பார்த்தால் சிரிக்கும்
உன்னை பார்க்காத போது
உன்னையே நினைத்து அழும்
ஆறுதலுக்கு உன்னை தேடும்
உன் தோல் சாய்ந்துகொள்ள..
சத்தமின்றி சலனப்பட்டுகொள்ளும்
இதயம் மட்டும் உள்ளுக்குள்
சமாதனம் சொல்லிக்கொள்வேன் எனக்கு நானே
என்னவென்று கேட்கிறாயா ?
நீ என்னவள் இல்லை என்பதை சொல்லி சொல்லியே
புரியவைப்பதாய் நினைப்பேன்
ஆனால் மீண்டும் ஒரு குழந்தையாய் அழும்..
எனக்கும் புரியாமல் ..
இவ்வழக்கம் என் வாழ்க்கையோடு ஒன்றிப்போனது
அதை விடு உனக்கு ஏதோ சொல்ல வந்து
அதை மறந்து என் சோகத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன்
யாரையோ நம்பி உன் மனதை தருகிறாய்
என்னையே உனக்காக இழக்கிறேன்
என்கிறேன் தர மறுக்கிறாய்
நீ கேட்காமலே நானும் கொடுக்காமலே..
என் மனம் மட்டும் உன்னடி
எப்படி சேர்ந்தது என்பதில்
எனக்கும் வியப்பே..
அதை மட்டும் காயப்படுத்தாமல் என்னிடமே தந்துவிடு.
எனக்கு சொந்தமில்லாத உன்னிடம்
என் இதயம் இருப்பதில்
எனக்கு துளியும் விருப்பமில்லை..
இத்தனை நாளாய்
நான் தொலைத்த நாழிகை
முழுதும் உனக்காக தான்
என என்னும் போது..
கடிகார ஓசை ஒலித்தது
உண்மையென..
யாருக்கும் பாரமாக இருக்க
விரும்பவில்லை என்று
என்னை பிரிந்து சென்றாய்..
உன் நினைவுகள் என்னும்
பெரும் சுமையை
என் மீது சுமத்தி..
போதும் பெண்ணே..
விடிகிற விடியல் எனதாகட்டும்
ஒரு புது வாழ்க்கை தொடங்கட்டுமே
நீயின்றி நான் வாழ்வேன்
உன் நினைவிருக்க எனக்கு ஐயமில்லை
இது என் காதலின் இரண்டாம் பாகம்
என் கவி பயணம் தொடரும்
நீயில்லா என் வாழ்க்கையில்..