ஹைக்கூ காதலன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ஹைக்கூ காதலன் |
இடம் | : விழுப்புரம் |
பிறந்த தேதி | : 22-Feb-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Dec-2011 |
பார்த்தவர்கள் | : 185 |
புள்ளி | : 65 |
காதல்..
சிலருக்கு பிடிக்கும்
சிலர் வெறுப்பார்
நான் இப்போதைக்கு ரசிக்கிறேன்
நாம் சந்திக்க நேர்ந்தால்
காதலை சொல்கிறேன் !!
அக்ஷய திரிதியன்று
எதை வாங்கினாலும்
அட்சைய பாத்திரம் போல்
பெருகிக்கொண்டே இருக்குமாம்
எதற்கும் நீ முத்தமொன்றை
முன்மாதிரியாய் கொடுத்து வை !!
அக்ஷய திரிதியன்று
எதை வாங்கினாலும்
அட்சைய பாத்திரம் போல்
பெருகிக்கொண்டே இருக்குமாம்
எதற்கும் நீ முத்தமொன்றை
முன்மாதிரியாய் கொடுத்து வை !!
வார்த்தைகளை வடிகட்டி பிறரிடம் வழங்க வேண்டும் ஏனெனில் ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்!
இசைக் கசைந்தாடும் புவிப்போல்
ஆசைக் கிசைந்தாடும் மனிதா !
ஆசையை துறந்து
பேராசையில் நுழைந்தால்
உன்னில் புதைந்த ஆசைப்போல்
புவிப்பிளந்து உள்செல்வாய் ...
யாருமெழுதிட வில்லை
எனக்கென ஒரு கவிதையை..
எனக்காகவே படைத்திருக்கிறான் போல்
பிரம்மன் உன்னை !!
யாருமெழுதிட வில்லை
எனக்கென ஒரு கவிதையை..
எனக்காகவே படைத்திருக்கிறான் போல்
பிரம்மன் உன்னை !!
உன் காதோர முடிகளுக்கு
கொஞ்சம் வருத்தமாம்..
உன் விரல்களுக்கு மயங்கி
கன்னத்தை தொடமுடியாமல்
வீழ்ந்துவிட்டோமென்று !!
உனக்கு வேண்டுமானால்
என் துணை தேவையில்லாமல்
இருக்கலாம்..
உன் பெயருக்கு பின்னால்...
என் பெயரின் துணை தேவை !!
நியாயம் தான்
உன்னை பின்தொடர்ந்தால்
உனக்கு மூக்கின் மேல்
கோபம் கோபமாய் வருவது..
உன்சுவாச காற்றிடம்
சொல்ல வேண்டியதுதானே
என்னை பின்தொடர்ந்தால்
இப்படி தான் காதல் காதலாய்
வருமென்று..!!