நீ மனிதன் தானா

கருவறை எழுந்தாய்
கல்லறைக்கு நடந்தாய்
இடையில் மனகணக்கு
இது தான் வாழ்க்கை!

அன்பு கடலில்
பணப் படகில்
பயணத்தை தொடங்கி
கரையை தேடுகிறாய்!

வேண்டுதலாய்
பெற்றெடுத்தாள் அன்னை
விலக்கி சென்றிட
வேண்டுகிறாய்!

மனிதன் கண்டான்
இயந்திரம்
மனிதன்
இயந்திரம் ஆனான் ...!

மண்ணும் பொன்னும்
விண்ணில் தேடுகிறான்
விதை விழுந்து முளைத்த
இடம் மறந்தான்...!

தரியில் பருத்தியிட்டு
பட்டாடை வேண்டி
நெய்திடும் உலகமடா
உழலும் மனதால் ...!

உலகத்தை காண்கிறாய்
உலகம் உழலுவதை மறக்கின்றாய்
திணையை விதைத்து
நெல்லை எதிர்நோக்குகிறாய்!

தொப்புள் கொடி அறுத்து
உலகை காட்டிய அன்னை
உறவை நீ அறுத்து
உலகில் வாழ்கின்றாய்!

உனை சுமந்த வயிறு
பட்டினியில்...
உனக்காக வாழ்ந்தவள்
வாழ்வை நீயே பறித்தாயே!

உதிரம் தந்தால்
கண்ணீர் வரவில்லை உனக்கு
வினையை விதைத்தாய்
அறுவடைக்கு காத்திரு ...!

பத்தியம்
பட்டினி பழக்கமே
வாழ்க்கையாச்சு
முன்பே உனை அறிந்தாலோ!

என்சான் உடம்பு
சிரசே பிரதானம்
புரிதலின் தவறால்
தலைகணமோ!

தூண்டிலா?
வேண்டுதலா!
அவள் மீது
விழுந்த உன் காதல்!

தாயை பிரிந்து வாயை பிளந்து
சென்றாய் அவளுடன்...!
நீ தான் உலகென வாழ்ந்தவள்
நோயில் விழுந்தாலே!

கல்லறை பூவெடுத்து
காதலி கூந்தலில்
சூட்டிடும் மூடா-உனக்கு
சந்ததி ஓர் கேடா!!

எழுதியவர் : கனகரத்தினம் (2-Mar-14, 9:22 pm)
பார்வை : 248

மேலே