ஏன் மறந்தீர்கள்

இருதயத்துயரை வார்தையில் கோர்த்து
சோகத்தை சொன்ன எழுத்தாளர்களே!
துயரை தூரிகையில் நிரப்பி
எழுத்தை கன்ணீராக பதித்த கவிஞர்ளே!
அழுகை அடக்கி, விம்மல் விழுங்கி
உரக்க முழங்கிய பேச்சாளர்களே!
துயரின் உச்சத்தில் விடியலுக்காக
வெயிலில் கருகிய போராட்டகாரர்களே!
மெளனம் பூசி; இதழ்களை இருக்கி பிடித்து
மனதிலே ஒப்பாரி வைத்த தமிழ் மக்களே!
அழுகுரல் கேட்டு உங்களை காப்பாற்றுவோம் என்று;
உண்ணாவிரத்தில் பிணங்களுக்கு மடல் எழுதிய இளைஞர்களே;
நீங்கள் புலங்காது போனீர்களோ !
புரியாது நடித்தீர்களோ !
ஒன்றும் மட்டும் உண்மை
சாதி ஒழிந்திருந்தால்
ஈழம் என்றே விடுதலை அடைந்திருக்கும் .

எழுதியவர் : சிவ பாலா (2-Mar-14, 9:48 pm)
சேர்த்தது : சிவ.பாலகிருஷ்ணன்
பார்வை : 962

மேலே