கவிஞன்

எளிமையே அவன் வாழ்க்கை
ஏழைக் கவிஞன் அவன்!
ஏழ்மை அவனுக்காய் !
எழுதப்பட்ட உயில்!- அவனை
ஏறெடுத்தும் பார்க்காத ​செல்வம்!
ஏணி போட்டு இறங்கிவிடும்!
என் செய்வான் பாவம்!

சொல்லுக்குச் செல்வன்!
சோகம் அவன் உடன் பிறப்பு
சுயமாய் சிந்திப்பான்!
சிதறவிடுவான் எண்ணங்களை!
சுகமாய் கவிகளில் சஞ்சரிப்பான்!.
சுவைத்துண்பான் கவியை - அதனால்
பசி அறியான் என்றும்.!

பணம் வேண்டி வாழான் இவன்
புகழ் வேண்டி வாழ்வான்!
புதுமை வேண்டி
புதுக் கவி யாத்திடுவான்!
புடம் போட்டுக்காட்டிடுவான்!
புதுச் சொல்லால் - அவன்
புலமை வௌிக் காட்டிவான்!

காதல் கதை சொல்லிடுவான்!
கவியரசன் ஆகிடுவான்!
கனவுகளில் வாழ்ந்திடுவான் - இருந்தும்
காலமது அவன்வாழ்வில்!
கைகொடுக்க முனையவில்லை
காசு பணம் சேறவில்லை
கடனே அவன் வாழ்வு!

தன் கவி அரங்கேறிவிட்டால்!
தீராத களி கொண்டு
துயரெங்கோ சென்றுவிடும்!
தனியாக விண்ணில் எங்கும்
தலை நிமிர்ந்து உயர்ந்து செல்வான்!
துணை ஒன்று வேண்டிடினும்
தூதனுப்பிச் சென்றிடுவான்!

அகங்காரம் அவன் பிறப்பு - அதனால்
அடிமை வாழ்வு மறுத்துரைப்பான்!
அருமைக் கவி அவன் செல்வம்!
அழகுத் தமிழ் அவன் அமுதம்!
ஆழம் பார்த்து கவியாப்பான்!
அமுத மொழி சுவைக்க வைப்பான்!
ஆசைத் தமிழ் உணரவைப்பான்!

கவிஞன் வாழ்வு இரு வாழ்வு!
கவிவாழ்வு அவன் சுகவாழ்வு!
குடும்ப வாழ்வு அவன் துயர் வாழ்வு!
கவி படைக்க இரு வாழ்வும்!
கதைகள் சொல்லும் காவியங்கள்!

எழுதியவர் : ஜவ்ஹர் (2-Mar-14, 11:36 pm)
Tanglish : kavingan
பார்வை : 108

மேலே