சாவதே மேல்

நான் தினந்தோறும்
இறந்து
கொண்டு இருக்கிறேன் !
செத்து செத்து
பிழைப்பதை விட
மொத்தமாய்
சாவதே மேல் !!!
பகல் எல்லாம்
எனக்கு இரவையும்
இரவு எல்லாம்
எனக்கு பகல் !!!
ஏன் இறைவா
என்னை மட்டும்
கொல்கிறாய்???
நேசிப்பது நான் செய்த
பிழையா ??
என் நேசமும்
பொய்யா ??
நிலவும் ஓர் நாள்
மறையலாம் ...
மீண்டும் உயிர்
பெறலாம் ; ஆனால்
மனிதப் பிறவிக்கு
மட்டும் மரித்துப்
போக நாட்கள்
இறைவன் கணக்கிட்டு
சொல்லுவானாம் !!1
என்ன கல்நெஞ்சம்?
மரித்தும் மறுபிறவி
எடுக்க வேண்டுமாம் !!
நிலவு மட்டும்
விதிவிலக்கா ??
மடிந்து போய்
மறுபிறவி வேண்டாமே !!!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (3-Mar-14, 4:24 am)
பார்வை : 93

மேலே