உறிஞ்சுருகிச் சா

காசுப் பணம் ...
புகையாக்கு ....
இளமைத் தனை ...
பலியாக்கு ...
இரத்த நாளங்கள் .
கரியாக்கு ....
பெற்ற மனம்.....
ரணமாக்கு ....

மெய் மறந்து உவகைக் கொள் ...
பாவி நீ மட்டும் ....

நாசி வழிப் ....
போதை ஏற்றி .....



பிடி அரிசிக்கு வழி இராது ...
உன் வீட்டினில் ...
நீயோ ....
போதைக்கு படியளப்பாய்........
வீதியில் .....

சாதித்தவன் போல் பிதற்றுவாய் ....
மயக்கத்தில்
உணர மறுப்பாய்....
போதையின் கையில் நீ ....
குரங்காட்டிக் கைக் குரங்கு என்பதனை .....




கற்பனை எல்லையை தாண்டாது ..
உன் கனவுகள் ....
கற்பனையிலேயே வாழ்ந்துக் ....
கரைந்து ...
மடிவாய் ....


தொப்புட் கொடி.......
உறவினது...
தாலிக் கொடி அறுத்து ...
விற்றேனும் ....
போதை எனும் தூக்குக் கொடி ...
தேடி அலைவாய் ...... ....
கிறக்கத்தில் தலையைத் தொங்க விட ....


பசித்திருப்பாய் ...
விழித்திருப்பாய் ...
ஆனால்......
இருக்க இயலாது ......
போதை இன்றி ....
உன்னால் .....



எதுவும் செய்வாய் ...
போதைக்காக ....
போதையிலும் ....
எதுவும் செய்வாய் ....

கொலையும் செய்வாய் ...
களவும் செய்வாய் ....
கலவியும் செய்வாய் ....
கற்பழிப்பும் செய்வாய் ....
காமுறுவாய் ......
உறவு ,வயது ,இட வித்தியாசம் பாராது
போதை மயக்கத்திலே .....


திருடன் ,கள்வன் ,காடையன் ....என
யார் தூற்றினாலும் ..
புன்னகைப்பாய் ....
சுரணைக் கெட்டு




மருந்துக்கும் உதவ மாட்டாய்.....
உன்
பெற்றாருக்கும் ...உற்றாருக்கும் ..
ஆனால் .....
நடப்பாய் ...
பறப்பாய்....
போதைத் தேடி ...
பல மைல் தாண்டி .... .....



வியர்ப்பாய் ...
குளிரிலும்

கொந்தளிப்பாய்....
கோபத்தில்
உடல்......
அறுத்துக் கொள்வாய் ....
போதைக் கிடைக்காவிடின் உனக்கு

பெற்றோரை ...
மிரட்டுவாய்
உற்றாரை ...
உருட்டுவாய் ...
பணம் கேட்டுப்
போதை வாங்க ....



போதை உறிஞ்ச ...
உன் நரம்புகள் புடைக்கும்
ஆரம்பத்தில் ....

உணர்வாய் உன் ......
ஆண்மை அதிகரிப்பதாய்.....

அப்பொழுது ....
உணர மாட்டாய் நீ ......
போதை ஒரு மாயை என்று .....

காலம் செல்ல உன் ...
ஆண்மைத் தூண்டா....

தீண்டாது உன்னை ....
எந்தப் பெண்மையும் ......



படலம் படலமாய் ....
புகை மண்டலங்கள் பூத்திருக்கும் ...
உன் இதய மண்டலத்தில் ....
அவை ....அடைத்து ...
புடைத்து
தடித்து ....
வெடித்து ...
மாள்வாய் நீ .....

உன் ....
அறிவு இயந்திரமும் ....
மூழ்கி ....
உக்கி ...
மக்கி
மரணிக்கும் ...
போதையிலே ....

புல்லும் முளையா........
உனைப் புதைக்கும் இடத்தில் ...
இறந்த பின்.....
நீ

எரித்தால் உன்னை ..
வளியும் மாசுப்படும் ........




ஊசி வழிக் கீதை ஏற்றினாலும் ....
திருந்தார் ....
நாசி வழிப் போதை ...
ஏற்றுபவர் .....

நீயும் ......
உறிஞ்சுருகிச் ......... சா ...
நாசி வழிப் போதை ஏற்றி ......




(போதை =போதை மருந்து)

எழுதியவர் : கீதமன் (3-Mar-14, 4:09 am)
பார்வை : 69

மேலே