நீளும் உன் நினைவுகள்

கண்ணீர் விட்டு - என்
கண்கள் ஒளியிழந்து விட்டன.
வலிகள் தாங்கி - என்
இதயம் வலுவிழந்து விட்டது.

கவி வரைய இன்னும் என்னுள்
வார்த்தைகள் எஞ்சியில்லை.
வேதனைகள் தீர்க்கவே
வேறொரு நாதியில்லை!

என் வாழ்வில்
ஏராளம் சோதனைகள்
எத்தனையோ சாபங்கள்.
இரவு பகல் சிந்திக்கிறேன்
இதயத்தை மீட்டெடுக்க,
என்றாலும் முடியவில்லை
உன்னிடமே தஞ்சமாக!

காலத்தின் கணக்கில்
நீ காணமல் போனாலும்
கன்னியென் உள்ளக் கிடங்கில்
'நீ' , 'உன் நினைவுகள்' கல்வெட்டாய்!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (3-Mar-14, 7:40 pm)
பார்வை : 174

மேலே