ஒரு மௌனத்தின் அலறல்
தூங்கா நதிகளும்
தூங்குதடி - என்
தூங்கும் விழிகளோ
ஏங்குதடி
தனியே நிலவாய்,
சூரியனாய் காய்ந்தேனே...
ஓவியமாய் வரைந்தேனே
தூரிகையாய் எறிந்தாயே
உன்னை காவியமாக்கி கரைந்தேனே
என்னை கவிஞனாக்கி கரைந்தாயே...
பன்னீர் மேகங்கள்
வெண்ணீர் ஊற்றுதடி - என்
கற்பனை கனவுகளிலும்
கல்லறையே பூக்குதடி
சொட்டாத சொற்களும் - என்
கவிதைகளில் கண்ணீர் சொட்டுதடி
என் மனதில் கார்த்திகையானாய்
ஏன் மயிலிறகே மறைந்து போனாய்.
தங்கை கொண்டதால் தாயானேன்
தவறிழைத்ததால் தந்தையானேன் - தாரமே
தாயாய் உன்னை பெற்றதால் சேயானேன்...
பாவி நான் பாட்டுரைத்தேன்
பாவத்தை என் பாட்டில் வைத்தேன்
தாரமே நான் தவறிழைத்தேன்
தனிமையிலே தத்தளித்தேன்...
என்
நிலவே,
நிலவை காட்டி
சோறூட்டிய கதை மறந்தாயே!
கங்கை கரையின் ஓரத்திலே
கண்ணனின் காது மடல்
கவ்விய கதை மறந்தாயே!
வளைந்த்தாடிய மேகமும்
வளைந்து கொடுத்த தேகமும் - ஒன்றோடொன்று
வலை பின்னிய கதை மறந்தாயே!
அல்லி இதழ் கொண்டவளே
அள்ளிக்கொண்டு செல்வாயா.?
பாதி உடல் பெற்றவளே - என்னுடன்
பள்ளி கொள்வாயா.?
இன்பத்தின் துன்பமானாய்
துன்பத்தின் இன்பமானாய்.
விவாகரத்து பெற்றவளே - நீ
விரும்பி திரும்பி வருவாயா.........