காதல் சமிக்கை,,
காதல் சமிக்கை,,
எழுதாத இலக்கணமென
உன்னிதழோடினி எதையெடுப்பாய்
இறுகாமல் குடிகள்ளென விழி
இமையோடொரு சொல்லுதிர்ப்பாய்
உலாவலில் உளறியக் கதையாவிலும்
கள்ளக்குறும் பார்வைத்தூவி
யதில் கரிசல்விதைப்பாய்
இனி என்னோடு நீ
ஸ்திரமாயும் நொடியொன்றுமெய்யானால்
எமாற்றிடுந்தமிழினி
பெருங்கவிப்பெய்ய மனஞ்சாயாதே !!!
பணயம் வைத்த காதலின்மேல்
தழலெழுப்பும் இடிமுழக்கம்
தழுவியதால் பெருநடுக்கம்
தவிழ்ந்து பதியமிட்டப் பொய்களுக்குள்ளே
கால்மீதுகாலிடுங் கள்ளப்பரிசலுக்கு
பழிபோக்காயொரு காதல் சமிக்கை !!!
அனுசரன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
