செய்தக்க

திருக்குறளியம்
++++++++++++++
செய்தக்க அல்ல செயக்கெடும்;
செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
047. தெரிந்து செயல்வகை 0466.

செய்தக்க
நினைக்கக் கூடாதவற்றை
நினைத்தாலும் செயல்கெடும்--
நினைக்க வேண்டியவற்றை
நினைக்காது விட்டாலும்.
நினைத்த செயல்கெடும்--

சொல்லக் கூடாதவற்றைச்
சொன்னாலும் செயல்கெடும்--
சொல்லக் கூடியவற்றைச்
சொல்லாது விட்டாலும்
செயல்எல்லாம் கெடுமே--

செய்யக் கூடாதவற்றைச்
செய்தாலும் செயல்கெடும்--
செய்யக் கூடியவற்றைச்
செய்யவில்லை என்றாலும்
செயல்எல்லாம் கெடுமே--

எழுதியவர் : பேராசிரியர் (4-Mar-14, 4:58 am)
பார்வை : 176

மேலே