முளைத்தது

இரவு வயலின்
ஈரப் பதத்தில்
ஆழமாய் விதைக்கப்பட்ட
நாளையின் விதைகள்
நன்றாய் முளைத்து,
காலைக் கதிர்களாய்க்
கிளைபரப்பி எழுவதைத்தான்
நாம்
பொழுது விடிந்தது என்கிறோம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Mar-14, 7:22 am)
Tanglish : MULAITHATHU
பார்வை : 149

மேலே