தனிமையிடம் தஞ்சமா நெஞ்சம்

தனிமை விரும்பிடும் உள்ளமதோ
இனிமை வேண்டி அமர்ந்துள்ளது !
இயற்கை சூழ்நிலையை அறியாது
இதயமது கவலையே கொள்ளாது !
தனிமையிடம் தஞ்சமா நெஞ்சம்
தள்ளப்பட்ட நிலையே காரணமா !
காதலியின் வரவிற்கு காத்திருப்பா
காதல் வயப்பட்டதன் விளைவா !
ஆசனத்தின் மேல் ஆசுவாசம் ஏன்
ஆசை நாயகி வரவிலே தாமதமா !
இருக்கையின் மேல் இருப்பதென்ன
இருப்பு கொள்ளாமல் தவிப்பதென்ன !
இதயத்துடிப்பு வேகமும் கூடுகிறதோ
இதயத்தில் இருப்பவளின் நினைவால் !
பனிமழை படாதிருக்க குடையா
மழைநீர் விழாமலிருக்க தடுப்பா !
சலனமுள்ள மனத்திற்கு மாற்றுவிழியா
சமாதனம் பெற்றிட தனிமை நிலையா !
தன்னிலை அடைந்திட தனிமைதானே
முன்னிலை மருந்தானது எக்காலமும் !
பழனி குமார்