மருதாணிக்கோலம்

புள்ளிக்கோலம்
பூக்கோலம்

மழைக்கோலம்
மாக்கோலம்

வண்ணக்கோலம்
வான்கோலம்

விழாக்கோலம் என

அலங்காரக்கோலம் முதல்
அலங்கோலம் வரை
அழைத்து பார்த்துவிட்டேன்

திட்டவட்டமாய் தீர்மானிக்கப்பட்ட
தோல்விக்கு எதற்கு
தேர்வில் கலந்து கொள்வானேன் என

ஒப்பீட்டுக்கு ஒப்புதல் கொடுக்காமல்
ஓடி ஒதுங்கி ஒளிந்துவிட்டன

வஞ்சி உந்தன் கைகளில்
கொஞ்சி மிளிரும்
மருதாணிக்கோலத்துடன் மோதிடும்
துணிவு துளியும் இல்லாது ....

எழுதியவர் : ஆசைஅஜீத் (4-Mar-14, 10:39 am)
பார்வை : 102

மேலே