பெண்மை எத்தனை ஆசையடி

பிறந்த வீட்டின் பெருமை பேசி
புகுந்த வீட்டில் பொருள் சேர்த்து
அன்பு பாசங் குசத்தால் குத்தி குதறி
இல்வாழ்க்கை செழிப்புறச் சேர்க்குமடி!

ஓருயிராய் உருவாகி
மாற்றுயிராய் இடம் பெயர்ந்து
பல உயிரை உருவாக்கி
பாசத்தினில் திளைக்குமடி!

பந்த பாசத் தின்னுயிரை
தவணை முறை யிலெடுத்து
தம்பட்டம் பெருமையென
தன்பக்க மிழுக்குமடி!

அணி யணியாய் அணிந்திருந்தும்
புதிய அணிக்கு காரணங்கள்
பாசமெனும் மோசமாகி
பாவி யுயிர் போகுமடி!

பொற்கிளி பெற்றெடுக்க
தாய் மடியில் கைவைத்தாய்
தந்திரமாய் சொல்லும் மந்திரமாம்
இல்லாளென சொல்லா காத்திடு தாயே!

புகுந்த வீட்டு உறவெல்லாம்
பகடைக் காயாய் உருட்டுதடி
பாகற்காயாய் கசக்குதடி -உன் செயலே!
பைத்தியமோ யில்லை வைத்தியமோ!!

தவணையாய் பெற்று விட்டு
தனி யுரிமை கேட்குமடி!
சிரித்த முகங் கண்டு
சினம் கடந்து போகுமடி!

புகுந்த வீட்டுப் பெண்ணவளும்
சரிசமமாய் பகிர்ந்திட
எனைப் போல் உன்கணவன் செய்திட
ஒருபோதும் விடுவ தில்லையேனடி!!?

எழுதியவர் : கனகரத்தினம் (4-Mar-14, 11:45 am)
பார்வை : 510

மேலே