எங்கே போனது நம் அன்பு - கிழியும் தாளின் கலவரமா

புன்னகை எல்லாம் பணமாக
இட்ட உணவும் விலையாக !!..
உறவை பார்த்த அன்பிடம்
விலையை என்றும் நீ குறித்து..!

சில்லறை பார்க்கும் சிலரிடம்
வீதியில் வைத்து உரைக்காதே ..!!
அன்பின் விலையோ பூஜியமாம்
ஏளன சிரிப்பில் எல்லாரும் ..!!

உடைந்து போகும் ஓர் உள்ளம்
ஆயிரம் சிதறல் ஊர்வலமாய் ..!
விலகி போகா அன்பிடமும்
கண்ணீர் வழி காசு பார்த்தாயே ..!!

கையில் உள்ள உன் பணமே
வாளாய் மாறி வெட்டுதடா ..!!
கதறி அழுகும் அன்பின்
சிதறி வீழும் ரத்தத்தில்
பணத்தை தேடி பார்கிறாயே..!!

ஒரு தாளின் உறவு நாடி
உற்ற உறவை அழிப்பவனே ...!
அன்பின் அழகை அறிவாயா - நீ
வாழும் போதே இறந்தாயா ..??

சிரித்து பழகும் உன் அன்பை
சில்லறை போல் எறிந்தவனே .!!
சிதறி போன சில்லறையோ
மீண்டும் சிரித்தே பழகுதடா...!!!

பாழாய் போன உன் மனமோ
பணத்தை மட்டும் பார்க்குதடா ..!
பார்வையெல்லாம் பணம் பணமாய்
திட்டமெல்லாம் ஒரு விதமாய் ..!.

உருகும் உறவை
விறகாய் எரித்தாயே
எரிந்த பின்னும்
வெந்நீராய் மாறி - உன்
அழுக்கை போக்கி
அழகு பார்க்குதடா..!!

எங்கே போனது நம் அன்பு
அற்ப பணத்திற்கு அன்பை அழிக்காதே !!
வன்முறை எல்லாம் இங்கேனோ ?
கிழியும் தாளின் கலவரமாய் !!

ஒற்றை உறவில் உன் அன்பை
கட்டி வைத்து கலங்காதே ..!
ஆயிரம் உறவை நீ அணைத்து
அன்பின் அழகை ரசித்து பார்..!!

சொல்லி பழகு சில வார்த்தை
சொர்க்கம் அதிலே அறிமுகமாய் !!!

நின்றே நடந்தேன் என் மனதில்
பாத சுவடுகள் பதியாமல்
அன்பின் அழகை நான் ரசிப்பேன்
என்றும் மதியேன் இப்பணத்தை . !!

===============================================
அன்பை தேடும்
அனைத்து மனதிற்கும் சமர்ப்பணம்
===============================================

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (4-Mar-14, 11:54 am)
பார்வை : 683

மேலே