இடுகாட்டு எச்சங்கள்

ஆடி ஓடி
அடங்கிய
இடம் அதுவோ!

ஆணவம் கர்வம்
புதைந்த
இடம் அதுவோ!

சாதிகளும்
மதங்களும் சமத்துவம்
கண்ட இடம் அதுவோ!

வாழ்வில் கொண்ட
செல்வத்தை எடுத்துச்செல்லாத
இடம் அதுவோ!

எம்பாட்டன் உம்பாட்டன்
புதைத்து புல் முளைத்த
இடம் அதுவோ!

வெளிவரா
பொக்கிசமும்
வீதி வரும் நாள் அதுவோ!

எரிகொண்ட சடலமும்
சிரிக்கும் மண்டை ஓடும்
சொல்லும் நாளை இந்த இடம்
உனக்கும் தான் என்று!

மலர்ந்த மொட்டுக்களுக்கு
மரணம் நிகழ்த்திய
இடம் அதுவோ!

வந்தோரை வழி அனுப்பி
வெந்து - சாம்பலாய்
படிந்த இடம் அதுவோ!

பிறந்த வேசம் கொண்டு
மண்ணில் புதைந்து
அடங்கும் இடம் அதுவோ!

ஆடி ஓடி சம்பாதித்ததை
அள்ளிக்கொண்டு போகமுடியாத
இடம் அதுவோ!

கண்ணீர் கரைந்து
கரை சேரும்
இடம் அதுவோ!

மனிதன் வாழ்வில்
ஆசை படாத
இடம் அதுவோ!

வழி அனுப்ப வந்தோரை
வரவழைக்கும்
இடம் அதுவோ!

குள்ளநரி கூட்டங்கள்
கூத்தாடும்
இடம் அதுவோ!

இன்று இடுகாட்டு
எச்சங்களாய் மண்டை ஓடும்
எலும்புக்கூடும் தான்
மிச்சம்....

எதை கொண்டுவந்தோம்
அதை எடுத்துசெல்ல
வெறும் உடம்போடு வந்தோம்
அப்படியே செல்கிறோம்!

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (4-Mar-14, 11:56 am)
பார்வை : 117

மேலே