முதல்வன்
முனியனாக இருந்த போது என்னை
சனியனே என்றார்கள் சிலர் !
மாணவனாக இருந்த போது என்னை
மண்டு என்றார்கள் சிலர் !
இளைஞனாக இருந்த போது என்னை
இளிச்சவாயன் என்றார்கள் சிலர் !
குடும்பஸ்த்தனாக இருந்த போது என்னை
கூறுகெட்டவன் என்றார்கள் சிலர் !
இன்று அரசியல்வாதியாகி ஆட்சி
செய்கிறேன் என்னை
வருங்கால முதல்வனே என்றார்கள் மக்கள் !!!
என்னே கலி காலம் இறைவா !
எங்களிடம் இருந்து மக்களை காப்பாற்று !!!