சரியான ஜோடி
உன் தாத்தனுக்கு உன் பாட்டி
என் தாத்தனுக்கு என் பாட்டி
உன் அப்பனுக்கு உன் அம்மா
என் அப்பனுக்கு என் அம்மா
உன் மாமனுக்கு உன் அத்தை
என் மாமனுக்கு என் அத்தை
உன் சித்தப்பனுக்கு உன் சித்தி
என் சித்தப்பனுக்கு என் சித்தி
உன் பெரியப்பனுக்கு உன் பெரியம்மா
என் பெரியப்பனுக்கு என் பெரியம்மா
உன் அண்ணனுக்கு உன் அண்ணி
என் அண்ணனுக்கு என் அண்ணி
எல்லாருக்கும் எல்லாரும்
சரியான ஜோடிதான்
நாம் இருவரும் சேருவதுமட்டும்
அவருக்கு சரியில்லையா?
-இப்படிக்கு முதல்பக்கம்