இறைவன் - வேண்டுதல் வேண்டாமை இலாதவன்

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"

மேற்கண்ட பொய்யா மொழியின் கூற்றினை கர்நாடக மாநிலம் உடுப்பியில் கிருட்டிணனாக உறையும் இறைவன் தன் திருவிளையாடல் ஒன்றின் வாயிலாக உலக மக்களுக்கு உணர்த்தினார்.

உடுப்பியில் தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த கனகதாசர் என்பவர் அங்கு கோயில் கொண்டு வீற்றிருக்கும் கிருட்டிணன் பால் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அவர் தம்புரா இசைப்பதில் வல்லவர். தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த அவருக்கு அந்நாளில் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட அனுமதி அளிக்கப்படவில்லை.

ஆயினும், கனகதாசர் நாள்தோறும் கோயிலுக்குப் பின்புறம் நின்று, தம்புரா இசைத்து,உளமுருக இறைவனைப் பாடி வந்தார். இவ்வாறு பல ஆண்டு காலம் தொடர்ந்தது.

ஒரு கிருட்டிண ஜெயந்தி நன்னாளில் அவ்வாறு கனகதாசர் கோயிலுக்குப் பின்புறம் நின்று இறைவனை உளமாற பாடி வணங்கிக் கொண்டிருக்கையில், கோயிலுக்குள் திரளான மக்கள் கூடியிருக்க, சற்றும் எதிர்பாரா வண்ணம் கோயிலுக்குப் பின்புறம் இருந்த மதில் சுவரின் கற்கள் சில தாமாக கீழே விழ அங்கு நின்றுக் கொண்டிருந்த கனகதாசரை நோக்கி சரியாக 180 பாகைத் திரும்பினார் இறைவன்

அன்றிலிருந்து இன்று வரை அத்திருக்கோயிலுக்கு யார் சென்றாலும் அவர் கோயிலின் பின்புறமாகச் சென்று அந்த சுவரில் கற்கள் தாமாக விழுந்து ஏற்படுத்தப்பட்ட ஓட்டையின் வாயிலாகத் தான் இறைவனை வணங்க வேண்டும்

எழுதியவர் : யாழினி குழலினி (4-Mar-14, 5:35 pm)
சேர்த்தது : Yaazhini Kuzhalini
பார்வை : 222

சிறந்த கட்டுரைகள்

மேலே