என் அழகி கருப்பாயி

கழனியிலே
நீர் பாய்ச்சும்
இந்த மாமனுக்கு,

கம்மா கரை ஓரமா
கஞ்சி கலயத்தை
தூக்கிக் கொண்டு நீ
கழனிக்கு வந்து விடு,

அங்கோ!
அழகானப்
பூஞ்சோலையும்
உன்னைக் கண்டு
தலை குனியுதடி,

ஓடும்
தண்ணீரிலே
உன் முகம்
ஜொலிக்குதடி,

கண்ணே!
கஞ்சி கலயத்தின்
கழுத்தும்

உன் மெல்ல
நடை (இடை) இடுப்பும்
என்னை பிரம்மிக்க செய்யுதடி ,

நீ துள்ளிக்
குதித்தோடும்
வரப்பினிலே

பனித்துளியும் சிதறுதடி
அந்தப் பச்சை வெட்டுக்கிளியும்
குதிக்குதடி,

உன்
குரலோசை கேட்டு
குயில் தன் பாட்டை
மறந்ததடி,

உன்
கருங்கூந்தல் அழகைக்
கண்கொண்டு
கார் மேகம் மழை நீராய்
கண்ணீர் சிந்துதடி,

கட்டழகு
உன்னைக் கண்டு
கலைமானும் ஓடுதடி,

நீ கூப்பிடும்
குரலோசை
இந்த கூர்மையான
மலையைக்
குத்திக் கிழிக்குதடி,

மரிக்கொழுந்து
குரல் கேட்டு
வாமா......! என்றேன்,

மாமா வந்துடேன்!
என்று கூறி
வரப்போரம் நீ விழவே!

பாசமான
மாமன் மனசு
பதறி ஓடி வர,

மாமா விழுந்தது
நான் அல்ல
இந்த கஞ்சிக்
கலயம் தான்,

கொட்டிய
கஞ்சியை
குமரி நீ அள்ளி
எனக்கு ஊட்ட,

நான்
அள்ளி உனக்கூட்ட
இரு வயிறும் நிறைந்து விட,

பயிரெல்லாம்
வாடுதடி
நம் பாசத்தைக் கண்டு!

பச்சைக்கிளி
உன்னை கண்டு
பட்ட மரம் தலுக்குதடி,

மத்தியான நேரத்திலே
உனக்காக அந்த
சூரியனோ மஞ்சள்
வெயில் அடிக்குதடி,

மரிக்கொழுந்து வாசம்
மரஞ்சாலும் என் அழகி
கருப்பாயி பாசம்
ஒருநாளும் மறையாது!

என்றும் உன் நினைவுடன்

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (5-Mar-14, 12:43 pm)
பார்வை : 674

மேலே