கொஞ்சம் மகிழ்ச்சி நிறைய மனசாட்சி

குழந்தைக அத்தனையும்
குறும்பா பேசிச் சிரிக்கையில
குளுருதுங்க மனசெல்லாம்...
கூடவே குலுங்குதுங்க
மூளைக்குள்ள...!!
வயசுக்குப் பொருந்தாம
வர்சினியும் வாணிஸ்ரீயும்
வாழ்க்க பத்திப் பேசயில
அதிருதுங்க இதயத்துக்குள்ள...!!!
தேசப்பிதா யாருன்னு
தேடிப்போயி கேள்வி கேக்க
அழகாச் சொல்லுமுங்க ..
அர்ச்சனாவும் அபிநயாவும்....!!!
குதூகலிச்ச நாமெல்லாம்
குறிச்சிக்கிடத் தவறிப்போறோம்...!!
கடலைமிட்டாய் திங்கும் புள்ள
கல்லூரிக்குப் போறதெல்லாம்
காதலிச்சி ஓடிப்போகன்னு
கருத்துப் பதிகையில....!!!
அடுப்பாங்கர சொவருக்குள்ள
அப்பனாத்தா சண்டையிட்டா
நாடுகடந்து நாறிப்போகும்
நாலுசெவத்து அன்னோனியம்..!!!
செவத்திருந்தா செறப்புன்னும்
கருத்திருந்தா இழுக்குன்னும்
வெள்ளாமக் காட்டுக்குள்ள
வெசம் வெதச்சி ரசிச்சி நிக்கோம்...!!!
வெள்ளி மொளைக்கயிலே
நெறவெறியப் பத்தவச்சா
இனவெறில எரிஞ்சி போகும்
எதிர்காலச் சமூகமெல்லாம்....!!!
மழலக்கிட்ட கேக்கயில
மனசாட்சிக்கு சொல்லிருங்க...
கொழச்ச களிமண்ண
வடிச்செடுத்தா பானை...!
வழிச்சி வீசுனா பாறை...!!!