மனசிலே சுருக்கமில்லை
பாட்டிஎன மாறினாள் காதலி அவள்
பஞ்சென நரைத்த கூந்தலில்
பார்வையால் மல்லிகை கோர்த்தேன்
பட்டென ஒரு வெள்ளை மயில்
பந்தாவாய் தோகை விரிக்க கண்டேன்...
எடுத்து முடிக்க கலர் ரிப்பனாய்
எழில் வானவில்லே அருகில் வா....
சுருக்கம் உனக்கும் பழக்குகிறேன் - எங்கள்
சுந்தரக் காதலின் இளமைச் செழிப்பை நீ உணர.....!!