முல்லைக் காட்டிலோர் மல்லிகை---அஹமது அலி---

முதுவேனில் காலம் பிறந்திருக்க
.....முல்லைக்காடு எங்கும் பூத்திருக்க
முதுமரம் வானளாவ வளர்ந்திருக்க
.....மும்மந்திகள் தாவியே விளையாடிட
.................................****.....................................

எரிகதிர் எழுந்து எழிலியம் கூட
...எரிமலர் ஏரியில் இதழ் திறக்க
எம்மனம் ரசனையில் துள்ளிட
....எங்ஙனம் எழுத்தில் சொல்லிட
.....................................****...............................

ஏகாந்தம் ஏகபோகம் கொண்டாட
...ஏமந்தத் திரைகள் விலகியோட
ஏகாசம் நுழைந்து குளிரடிக்க
...ஏங்கலோசை எங்கிருந்தோ கேட்க
..............................*****...................................

வரிப்புறம் கடித்திட்ட காய்கண்டு
...வடுவொன்றை வாயினால் ருசித்திட
வண்டலில் வாகாய் நடைபோட்டே
....வனப்புமிகு வனத்தை சுற்றி வர
...............................****..................................

கடுவளி தூரத்தில் சுழன்றடிக்க
...கடிறுகள் பிளிறல் காது பிளக்க
கட்டாரியும் ஆயத்தமாய் கையிலிருக்க
...கடவது புரியாமல் நின்றிருக்க
............................****....................................
முச்சி முழுவதும் சிலிர்த்து நிமிர
....முகனை நோக்கி பார்வை திமிர
முல்லைக் காட்டிலோர் மல்லிகையாய்
.....முழுமதி தேவதையை நான்கண்டேன்!
.....................................*****...................................


எரிமலர்-செந்தாமரை
ஏங்கல்-மயில்
ஏகாசம்- மேலாடை
ஏமந்தம்-பனி
கட்டாரி-குத்துவாள்
முகனை-முன்புறம்
கடுவளி-சூறாவளி
முதுமரம்-ஆலமரம்
வடு-மாம்பிஞ்சு
வண்டல்-நதிக்கரையோரம்
வரிப்புறம்-அணில்

எழுதியவர் : அலிநகர். அஹமது அலி. (6-Mar-14, 7:45 am)
பார்வை : 236

மேலே