ஜோசியம்

என்னிரு சிறகு தரித்து
என்னுலக சுதந்திரம் பறித்து
கம்பிகள் கொண்ட கூட்டினுள்
என்னையடைத்து..

பகுத்தறிவு கொண்ட ஜென்மமொன்று
பாதக, சாதகம் கேட்கிறது...

படைத்தவனில் கொண்ட
நம்பிக்கையை இழந்து
நான் எடுக்கும் சீட்டில்
உள்ளவற்றை நம்பி
எதிர்காலம் கனிக்க
கிளம்பிய கூட்டம்

ஆறாம் அறிவு கொண்ட
உன்னாலே அறிய
முடியாதொன்றை
ஐந்தறிவு கொண்ட
என்னிடம் அறிய
வந்த மூடர்கள்
கொஞ்சம்...

என்னை சிறையிலிட்டவன்
சம்பாதிக்க சொல்லும்
சாதகங்களை நம்பி
வாழ்க்கையில் சாதிக்க
தவறியவன் எத்தகைய
மதி கெட்டவன்

சிறையில் பசித்திருந்த
என்னை திறந்ததும்
பழமென நினைத்து
உண்ணத் தூக்கியதை
பறித்தெடுத்து கூறுகிறான்..
வந்தவருக்கு பாதக, சாதகம்

எப்போது கிடைக்குமோ
இந்த கிளிக்கு சுதந்திரம்..

எப்போது மறையுமோ
மானிடர்களின் மூடத்தனம்..

சோம்பேறித்தனம் உள்ளவரை
கூண்டுக்கிளிகளும்,
மூடப்பழக்கமும்,
இயலாமையும்,
ஏமாற்றமும் தான்
நிறைந்திருக்கும்
"வாழ்வில்"

எழுதியவர் : எம். ஏ. அஸ்ரப் ஹான் (7-Mar-14, 1:50 pm)
Tanglish : josiyam
பார்வை : 313

மேலே