தூங்கும் அனல்

மெல்லினம் பேசும் விழிவழி
==மின்மினி யாளின் குளிர்மொழி
புல்லினம் தேடும் பனித்துளி
==பொழிவது காதல் கனித்துளி.
வல்லினம் மயங்கும் இடையினம்
==வசீகரத் தென்றலின் உறைவிடம்
வில்லினம் தோற்க புருவமாய்
==விளைந்தது இமைமேல் உருவமாய்.
புயலெனப் பிறப்பெ டுத்து
==பூமனம் சாய்த்துச் செல்லும்
கயலினம் ரெண்டு நீந்தும்
==கண்களின் பார்வை மோத
முயலினம் வந்து துள்ளும்
==மோகனக் காட்டுக் குள்ளே
வயலது வெட்டி நெல்லும்
==வளர்த்திட சொல்லு முள்ளம்.
கொப்பென வளைந்தி ருக்கும்
==குருத்தினை சீவக் கொட்டும்
திப்பிலிக் கள்தனை அருந்த
==திருடனாய் வருகிற குரங்கு
தப்பியே செல்தல் போலே
==தாமரை கண்கள் செல்ல
எப்படித் தாங்கும் நெஞ்சம்?
==ஏந்திழை தூங்கும் அனலோ?